இந்திய அணியை திணறடித்த வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஏமாற்றம் அளித்த ஆட்டம்

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாகத் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார்.
முதல் ஓவரிலேயே ரோஹித் அவுட்டாகி பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
சாஃபுல் பந்துவீச்சில் எல்.பி.டபுள்.யூ முறையில் ரோஹித் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கே.எல்.ராகுல் 15 ரன்னிலும் ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.
நிதானமாக ஆடிய ஷிகார் தவானும் 41 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

தொடக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை

எளிதாக வெல்லக்கூடிய இலக்குதான் என்றாலும், வங்க தேச அணிக்குத் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
இந்திய அணியை திணறடித்த வங்க தேசம் : 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபடத்தின் காப்புரிமைTWITTER/@BCCI
லிடன் தாஸ் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
பின் நையிமும், சவுமியா சர்காரும் இணைந்து இந்திய பவுலர்களை எளிதாகச் சமாளித்தனர்.
பவுண்டரிகளை விளாசிய நையிம் 26 ரன்களில் சகால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சவுமியா சர்கார் கலீல் பந்துவீச்சில் போல்டானார்.

அடித்து ஆடிய முஸ்பிகுர்

இந்திய அணியை திணறடித்த வங்கதேசம் : 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபடத்தின் காப்புரிமைTWITTER/@BCCI
ஆட்டம் அவ்வளவுதான் வங்க தேசம் சுருண்டுவிட்டது எனப் பார்வையாளர்கள் கணிக்க, முஸ்பிகுர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.
வங்கதேச அணி வெற்றி பெற்ற கடைசி ஓவரில், 4 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியில் வங்கதேச அணி 19.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Advertisement