உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள்.


முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்.
01) வாய்ப் புற்றுநோய் ORAL CANCER
ஒவ்வொரு நபரும் சுய வாய்ப் பரிசோதனையைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும் . வாயில் பாரதூரமான இழையவியல் நிலமைகளைக் கொண்ட நிலைகள் , ( OPMD ) , ஒருவரில் வாய்ப் புற்று நோய் தோன்றுவதற்கு முந்தைய நிலைகளாகக் கொள்ளப்படும்.
(OPMD) இன் அறிகுறிகள்
தொடர்ந்து காணப்படும் வெள்ளைத் திட்டுகள் அல்லது புள்ளிகள்
-வாயின் உள்மேலணி இழையமானது . வெளிறியும், திரட்சியடைந்தும் , எரிச்சலூட்டுவனவாகவும், வாயைத் திறப்பதில் சிரமமும் காணப்படல்,
-தொடர்ந்து காணப்படும் சிவப்பு நிறத் கலந்து காணப்படும் சிவப்பும் திட்டுகள் அல்லது புள்ளிகள்
-வெள்ளையும் கலந்த புள்ளிகள் அல்லது திட்டுகள்
-நீண்ட காலத்துக்குக் குணமடையாத வாய்ப் புண்கள் . மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் யாராவது பாதிக்கப்பட்டுக் காணப்பட்டால் அவரை உடனடியாகப் பல் மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற அனுப்பிவைக்க வேண்டும்.
வாய்ப் புற்றுநோய்க்குரிய அதியுயர் ஆபத்துக் காரணிகள் கொண்டவர்கள்
*தினமும் வெற்றிலை மெல்லும் மக்கள்
*வெற்றிலை மெல்லுவதோடு கூடுதலாகப் புகை பிடிக்கின்ற மக்கள்
*வணிகத் துறைப் புகையிலை மற்றும் பாக்குப் பாவனைகளுக்கு அடிமையான மக்கள்
அதிக ஆபத்துக் காரணிகளைக் கொண்ட மேற்குறிப்பிடப்பட்ட மக்கள் , உடனடியாக பல் மருத்துவர்களிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும்
02 . உணவுக்குழாய் - களப் புற்றுநோய் ESOPHAGEAL CARCINOMA
மருத்துவ அறிகுறிகள்
மூன்று வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து உணவு விழுங்குவதில் கஷ்டம்
மூன்று வாரங்களுக்கு மேலாக உணவு விழுங்கும் போது வலி ஏற்படல்
தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல் .
03. இரைப்பைப் புற்றுநோய் GASTRIC CARCINOMA
மருத்துவ அறிகுறிகள்
வயிற்றின் மேற்பகுதியில் வலியும் அசௌகரியமும் ஏற்படல்.
பசியின்மை
சில வேளைகளில் கறுப்பு நிறமாக மலம் கழித்தல்
ஓங்காளம் மற்றும் வாந்தி ஏற்படல்
தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல் .
இரத்தச் சோகை ஏற்படல்
04 . பெருங்குடல் மற்றும் மலக்குடற் புற்றுநோய் COLO RECTAL CARCINOMA
மருத்துவ அறிகுறிகள்
மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறல் .
மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படல் .
வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுடன் கலந்த மலங்கழிக்கும் வழக்கம் .
மலவாசலுக்கூடான இரத்தப்போக்கு காணப்படல் .
-மெல்லிய நூல் இழைபோல் மலம் வெளியேறல் .
முழுமையாக மலம் வெளியேறாத உணர்வு காணப்படல் .
வயிற்று வலி காணப்படல் .
காரணமற்ற உடல் எடை இழத்தல் .
(புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2)
முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்