சஜித் பிரேமதாசவின் வருகையை முன்னிட்டு, முல்லைத்தீவில்

-சண்முகம் தவசீலன் 
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்கும்  தேர்தல் பிரசார கூட்டம்,  முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம் பெற்றது.
இந்த நிலையில், மைதானம் மற்றும் முள்ளியவளை தொடக்கம் முல்லைத்தீவு வரையான  வீதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பல்லாயிரக் கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement