20 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்


தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியை கொண்டு நடத்திய வன்முறை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமா எனும் நகரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தாய்லாந்து முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
இளநிலை அதிகாரியான ஜக்ரபந்த் தோம்மா, ஒரு ராணுவ முகாமில் இருந்து ஆயுதங்களைத் திருடுவதற்கு முன்பு தனது மூத்த அதிகாரியைக் கொன்றார்.
பிறகு, அங்குள்ள வணிக வளாகத்துக்கு சென்ற சந்தேக நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தினார். அதையடுத்து, சிறிது நேரத்திற்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை இட்ட அந்த நபர் தற்போது மறைவிடத்தில் இருப்பதாக தெரிகிறது.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஜக்ரபந்த் தோம்மாபடத்தின் காப்புரிமைBBC SPORT
Image captionதாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஜக்ரபந்த் தோம்மா
தாக்குதலுக்கு உள்ளான வணிக வளாகம் தற்போது பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அங்கு சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து, தாக்கியவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தெளிவில்லை.
இந்நிலையில், துப்பாக்கிதாரியின் ஃபேஸ்புக் பதிவுகளை நீக்கியதோடு அவரது கணக்கை முடக்கிவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.