அவுஸ்திரேலியாவில்,நாட்டில் நீண்ட நாள் தங்க ஒரு வாய்ப்பு'

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று அங்கு வேலை பார்க்கும் நபர்களுக்கு அந்நாட்டில் அதிக நாள் தங்க ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது அந்நாட்டு அரசு.

அந்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் தீக்கிரையான பண்ணைகளில் பணி செய்ய முன் வருபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும். முன்பு வொர்க்கிங் ஹாலிடே விசாவில் செல்பவர்கள் ஆறு மாத காலம் பணி செய்ய முடியும்.
காட்டுத்தீயால் தீக்கிரையான பண்ணைகளில் வேலை செய்பவர்கள் 12 மாதங்கள் தங்க அனுமதி வழங்கப்படும்.
ஆஸ்திரேலியா நாட்டில் நீண்ட நாள் தங்க ஒரு வாய்ப்பு மற்றும் பிற செய்திகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
நிரந்தர வேலை காரணமாக ஒரு நாட்டுக்குச் சென்று தங்க 'வொர்க் விசா' பெற்றிருக்க வேண்டும். விடுமுறையைக் கழிக்கச் சென்றவர்கள் சிறு சிறு வேலைகள் செய்து பொருளீட்ட 'வொர்க்கிங் ஹாலிடே' விசா போதுமானது.


Advertisement