கொரோனாவுக்காக புதிய ஆடை


பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவம் செய்வோருக்கான புதிய சீருடை ஒன்று அம்பாறை அரச மருத்துவமனை மருத்துவக்குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் கழிவாக அகற்றக்கூடிய பொலித்தீன் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள அதேவேளை ஒருமுறை மாத்திரமே இதனை பயன்படுத்த முடியும் .


அம்பாறை வைத்தியசாலையில் கொரோனா கட்டுப்பாட்டு பிரிவினால் வைத்தியசாலை ஊழியர்களுக்கு அவசியமான ஆடைகளை குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இலகுவில்  உக்கும் பொலித்தீன் பையை  பயன்படுத்தி இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த ஆடையை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த முடியும் என அம்பாறை வைத்தியசாலையின் நுண்ணுயிர் பிரிவு வைத்தியர் தர்ஷன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த ஆடையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த ஆடையை அம்பாறை வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்க கூடிய ஆரம்ப சிகிச்சை வழங்குவதற்காக அம்பாறை வைத்தியசாலையில் பல இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.