கல்முனை மக்களுக்கான வேண்டுகோள்

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை  அமுல்படுத்தி எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான மீளாய்வு கூட்டம் துறைசார் அதிகாரிகளுடன்  இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் முற்பகல் புதன்கிழைமை(25) இவ்விடயம் தொடர்பாக  விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில்  இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், கல்முனை  மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் ,  மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர்,  கல்முனை பிரதேச செயலாளர்  எம்.நஸிர் கல்முனை வடக்கு உப பிரதேச  செயலாளர் ரி.அதிசயராஜ் பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப், கல்முனை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக்  ,கல்முனை பொது சந்தை செயலாளர் ஏ.எல். கபீர்,  மாநகர சபை உறுப்பினர்களான ஆரிகா காரியப்பர், பஸீரா  ரியாஸ்  ,பிராந்திய  முப்படை பிரதானிகள் சுகாதார உயர் அதிகாரிகள்  அரசியல் பிரமுகர்கள் என பலரும்   கலந்து கொண்டனர்.


அத்துடன்   வெளிநாடுகளில் இருந்து   கல்முனை பிராந்தியத்தில்  முடங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும்  பிரதேசவாசிகள்  தொடர்பாக  விபரங்கள் சேகரிக்க  நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் வெளிநாடுகளில் இருந்து   அண்மையில் கல்முனை பிரதேசத்திற்கு வருகை தந்த 145 பேரையும் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலதிக விடயங்கள் தொடர்பில்   விசேடமாக   கல்முனை மாநகர சபையில்  அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement