அக்கரைப்பற்று நீதிமன்றினால்,பொதுச் சந்தையை மூடுமாறு கட்டளை!


#SM.இர்சாத்.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலப் பகுதிகளில், மக்கள் பொதுச் சந்தையில் மிகுந்த நெரிசலுடன் பெர்ட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். மேலும், கொரோனா தொற்று நோய்க் கிருமிகள் இக் காலப் பகுதியில், சமூக இடைவெளி குறைவடைந்து காணப்படுவதால், இந் நோயானது, பரவலுக்கான ஏதுக்கள் காணப் படுகின்றன.

ஏலவே குறிக்கப்பட்ட பொது மக்கள் குறைந்த பொது இடங்களில், விற்பனை செய்யுமாறு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மாநகர சபை போன்றவை தெரிவித்த கருத்துக்களைப் புறக்கணிப்பது போல, பொறுப்பற்று செயற்பட்டு வந்த காரணத்தினால், இன்றும் மிகுந்த சனத்திரளான மக்கள் வெள்ளம் பொருட்களைக் கொள்வனவு செய்ய பொதுச் சந்தையில் கூடியிருந்தனர்.  இது தொடர்டபாக  சுகாதார வைத்திய அதிகாரிகயினால் முறைப்பாடொன்று  பொலிசில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து அக்கரைப்பற்று பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட ”பி” அறிகையின ஆராய்ந்த, அக்கரைப்பற்று கெளரவ நீதிவான் ஜனாப் H.M.M. ஹம்சா அக்கரைப்பற்றுப் பொதுச் சந்தையை மூடுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.