வாழ்வாதார உதவிகள்


தற்பொழுது அமுலில் காணப்படும் ஊரடங்கு சட்டம் காரணமாக நாளாந்த பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அன்றாட வாழ்க்கைச் செலவுகளை மேற்கொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்குப் பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், குருநாகல் நகரசபைக்கு உட்பட்ட 1000 வரிய குடும்பங்களுக்கு, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியிலிருந்து 50% ஐ ஒதுக்கி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு, வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று (25) இடம்பெற்றது.

குருநாகல் மேயர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.