தனித்திருந்து,தியானித்திருந்து உபவாசமுற்றோருக்கு, நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!




நோன்புப் பெருநாள்அல்லது ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர் அரபு மொழி: عيد الفطر) என்பது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது.ரமலான் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது பொருளாகும்.

ரமலான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும் தாகித்திருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும் களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர்.

தனித்திருந்து,தியானித்திருந்து  உபவாசமிருந்தோருக்கு, நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை www,ceylon24.com குழுமம் உவந்தளிக்கின்றது!

இணைய மேலாளர்
இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான..@ceylon24