கொத்மலைக்கு மின் கிடைத்தது

 

கெரவலபிட்டி மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது சில பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.


நாடளாவிய ரீதியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டியில் உள்ள மின்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் 2 மணி நேரத்திற்குள் மின் விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.Advertisement