தடை



அமெரிக்காவில் நாளை (ஞாயிற்றுக்கிழமையிலிருந்து) டிக் டாக் மற்றும் வீ சாட் செயலிகள் தடை செய்யப்படுகின்றன.


இருப்பினும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி நேர ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் இந்த தடை விலக வாய்ப்புகள் உள்ளன.


இந்த ஒரு ஆப் ஸ்டோரிலும் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுவது நிறுத்தப்படும் என அமெரிக்க வர்த்தத் துறை தெரிவித்துள்ளது.


இந்த செயலிகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன எனவும் இந்த செயலிகளில் சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்கள் சீனாவுக்கு வழங்கப்படலாம் டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனாவும் அந்நிறுவனங்களும் மறுக்கின்றன.


வீ சாட் செயலியை பயனர்கள் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பயன்படுத்த இயலாது ஆனால் டிக் டாக் செயலியை நவம்பர் 12ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.


இந்த ஆணையின் மூலம் “அதிருப்தி” அடைந்திருப்பதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் சந்தேகங்களை கருத்தில் கொண்டு இதுவரை இல்லாத அளவு கூடுதல் வெப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


வி – சாட் நிறுவனத்தை நிர்வகிக்கும் டென்சன்ட் நிறுவனம் இந்த தடை “துரதிருஷ்டவசமானது” என தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தொடர்ந்து அமெரிக்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.


அதிபர் டிரம்ப் ஆகஸ்டு மாதம் நிர்வாக ஆணை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்பின் வர்த்தகத் துறை இந்த செயலிகளுக்கான தடை ஆணையை வெளியிட்டுள்ளது.


இருப்பினும் திட்டமிட்டுள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஓரக்கலுக்கும், டிக் டாக்கை நிர்வகிக்கும் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு அது அமெரிக்க அதிபரால் ஒப்புக் கொள்ளப்பட்டால் இந்த தடை இருக்காது.


வெள்ளியன்று டிக் டாக் தொடர்பாக விரைவில் ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.