செங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது, கார்

 


மட்டக்களப்பு, செங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.செங்கலடி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்து பிழையான திசையில் சென்ற கார் வீதியால் நடந்து சென்றவர் மீது மோதியது.


மேலும், அவ்வீதியில் துவிச்சக்கர வண்டியில் சரியான பாதையில் சென்ற ஒருவரையும் மோதியதுடன் மறுபக்கத்தில் இருந்த கடையொன்றிலும் மோதி இறுதியாக மின் கம்பத்தில் மோதுண்டுள்ளது.


இவ்விபத்தில் கொம்மாதுரையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான  சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (வயது-40) என்பவர் உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியவர் மது போதை வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுவதுடன் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.Advertisement