கிண்ணியாவில் பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்பு!

 REPORTS#KinniyaWhatsupGropup.
குறித்த மாணவியின் சடலம் இன்று (24) காலை அவரது வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, குறித்த மாணவி புதன் கிழமை (23) இரவு தனது படுக்கை அறையில் நித்திரைக்குச் சென்றதையடுத்து,

இன்று காலை குறித்த நேரத்துக்குள் வரவில்லை என்பதால் வீட்டார் தேடிய வேளையில், அவரது படுக்கை அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிண்ணியா #மாஞ்சோலைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இவர், கிண்ணியா பிரதேச பாடசாலையொன்றில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று வருவதாகவும், கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றியதையடுத்து, இந்த வருடம் இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Advertisement