தொலைபேசியில் உரையாட கைதிகளுக்கு சந்தர்ப்பம்

 


குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு சிறைக் கைதிகளுக்கு இன்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.


கைதிகளின் உளநலத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.


தமது குடும்பத்தினருடன் உரையாடுவதற்காக கைதிகளுக்கு மூன்று நிமிடங்கள் வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார். 

சிறைச்சாலை அதிகாரியொருவரின் முன்பாக கைதிகள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என அவர் கூறினார்.


இன்று முதல் எதிர்வரும் 2 மாதங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள கைதிகளுக்கு இவ்வாறேனும் நிவாரணத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் சந்தன ஏக்கநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
Advertisement