பட்ட மரமல்ல,தானாக வீழ்ந்த மரம்


 (க.கிஷாந்தன்)

100  வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா, ஹங்குராங்கெத்த - உடவத்த ஊடான கலவுட வீதியில் உடவத்த கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் சேதமடைந்துள்ளது.

அத்துடன், இம்மரத்தின் கிளையொன்று அருகில் இருந்த மற்றுமொரு மரம்மீது விழுந்தில் அம்மரமும் சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீடொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி சேவையும் இடம்பெறவில்லை.

“ மக்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் குறித்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், தாமதம் ஏற்பட்டதாலேயே அவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.” – என்று ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.

இன்றைய தினத்துக்குள் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பும் அதுவரையில் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அவர் கோரினார்.Advertisement