5வது முறையாக மும்பை அணி சாம்பியன்

 


துபாய்: ஐ.பி.எல்., தொடரில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை மும்பை அணி தக்கவைத்துக் கொண்டது. பைனலில், 5 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தியது. அபாரமாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாசினார்.latest tamil news
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. துபாயில் நடந்த பைனலில் மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.

டில்லி அணிக்கு ரிஷாப் பன்ட் (56), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (65*) அரைசதம் கடந்து கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் பவுல்ட் 3 விக்கெட் கைப்பற்றினார்.


latest tamil newsஎட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (68), இஷான் கிஷான் (33*) கைகொடுக்க, 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5வது முறையாக (2013, 2015, 2017, 2019, 2020) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Advertisement