ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பரவும் கொவிட்


#RA.Pirasaath 

கொழும்பு – ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 56 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவிக்கின்றார்.


இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 46 சிறுவர்கள் மற்றும் தாய்மார்களும் அடங்குவதாக அவர் குறிப்பிடுகின்றார்.


அத்துடன், வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிகள் உள்ளடங்கிய 10 பேருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.


இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளான அனைவரும் அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.


ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் கடமையாற்றும் 90 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவிக்கின்றார்.Advertisement