மியன்மாரில் மீண்டும் மடிகின்றதா,ஜனநாயகம்?


 


மியான்மர்: 

மியான்மர் பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகியின் தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 


தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கணிப்பீடுகளின் படி தமது கட்சி கடந்த 2015ம் ஆண்டு பெற்றதை விட அதிகளவு இடங்களில் வெற்றி பெறும் என தேசிய ஜனநாயக லீக் கட்சி அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மர் தோ்தல் விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. மியான்மர் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் மற்றும் 7 மாநில சட்டப்பேரவைகளுக்கு 2 தினங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். தொடர்ந்து, வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வந்தது.



ஆளும் கட்சியான ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தனர். இந்நிலையில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயக தேசிய லீக் கட்சி முன்னிலை வகிப்பதாகவும், ஆட்சியமைக்க தேவைப்படும் 322 நாடாளுமன்ற இடங்களை பெற்றுவிட்டதாகவும், கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ முடிவுகளை இன்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை முழுமையாக வெளியிட ஒரு வாரம் ஆகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனினும் ஆளும் கட்சியான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி தாங்களே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மியான்மரில் 50 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2015ல் ராணுவத்தின் உதவியுடன் பொது தேர்தல் நடைபெற்றது. ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடிய ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.