அட்டன் ஜும்மா பள்ளிவாசலில் விசேட தொழுகை

 


(க.கிஷாந்தன்)

கொரோனா கொடிய தொற்று நோயிலிருந்து நாடும் நாட்டு மக்களும் மீண்டு வரவேண்டும் என்பதற்காக சகல மதஸ்தலங்களிலும் விசேட வழிபாடுகளை செய்யும் வண்ணம் நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கமைவாக மலையகத்தில் 08.11.2020 அன்று மாலை அட்டன் ஜும்மா பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றது.

அட்டன் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக குழு தலைவர் ஏ.ஜே.எம். பசீரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விசேட தொழுகையில் அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர், உப தலைவர், நகர சபை உறுப்பினர்கள், அட்டன் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த விசேட தொழுகை பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.Advertisement