உலக நாடுகளின் செய்தித்தாள்கள்,டொனால்ட் டிரம்பின் தோல்வியை வரவேற்றன


நான்கு நாட்களாக காத்திருந்த நிலையில் சர்வதேச அளவில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தித்தாள்கள் அனைத்தும் டொனால்ட் டிரம்பின் தோல்வியை பாராட்டியுள்ளதுடன் ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் உலக நாடுகள் எதிர்கொள்ளவுள்ள வெளிவிவகார கொள்கை மாற்றங்கள் குறித்தும் எச்சரித்துள்ளன.


பிரிட்டன் முதல் கென்யா வரையிலும் அவுஸ்திரேலியாவிலும் வெளியான செய்தித்தாள்கள் பைடனிற்கும் கமலா ஹாரிசிற்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளன.


பிரிட்டனின் இன்டிபென்டன்ட் அமெரிக்காவிற்கு புதிய உதயம் தெரிவித்துள்ளதுடன் ஜோபைடன் கமலா ஹாரிசின் படங்களை வெளியிட்டுள்ளது.


கறுப்பின பெண்மணியொருவர் அமெரிக்க கொடியால் தன்னை போர்த்தியபடி காணப்படும் படத்தை வெளியிட்டுள்ள சண்டே டைம்ஸ் எப்போதும் உறங்கும் பைடன் அமெரிக்காவை உறக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார் என தெரிவித்துள்ளது.
ஓப்சேவர் ஜோ பைடனின் படத்தை வெளியிட்டு இட்ஸ் ஜோ என தெரிவித்துள்ளது.


பல செய்தித்தாள்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள மோசடிகள் இடம்பெற்றுள்ளன என குற்றம்சாட்டும் டிரம்ப் ஏமாற்றத்துடன் காணப்படும் படத்தினையும் வெளியிட்டுள்ளன.
மத்தியகிழக்கின் சில பழமைவாத கொள்கைக்கு ஆதரவான செய்தித்தாள்கள் மோசடிகள் குறித்த ஆதாரமற்ற செய்திக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதுடன் ஜோ பைடனால் மத்திய கிழக்கு எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளன.


தேர்தல் தோல்வியை டிரம்ப் எதிர்கொண்ட விதம் குறித்து சர்வதேச பத்திரிகைகள் கவனம் செலுத்தியுள்ளன.
ஜேர்மனியின் பில்ட் செய்தித்தாள் ஒழுக்கமற்ற விதத்தில் வெளியேறுதல் என செய்தி வெளியிட்டுள்ளதுடன் டிரம்பின் படத்தை வெளியிட்டுள்ளது.
என்ன விடுதலை? என்ன நிம்மதி என இடதுசாரி
அதேவேளை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் சுவீகரிக்காத அளவிற்கு பெரும் சுமையை பைடன் சுவீகரித்துள்ளார் என தெரிவித்துள்ள அந்த செய்தித்தாள் டிரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்வார் என்பது நினைத்துப்பார்க்க முடியாத விடயம் என குறிப்பிட்டுள்ளது.


ஈரானின் செய்தித்தாள்கள் டிரம்பின் வீழ்ச்சியை கொண்டாடியுள்ளன.
எனினும் ஈரான் செய்தித்தாள்கள் பைடனை வரவேற்கவில்லை- முகக்கவசமற்ற எதிரி சென்றுவிட்டான் முகக்கவசம் அணிந்த எதிரி வந்துள்ளான் என ரீசலாட் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் தீவிரபழமைவாத வட்டான் ஈ- எம்ரூஸ் ஜனநாயகத்தின் புதைகுழி என தெரிவித்துள்ளதுடன் தேர்தல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளன.
இதேபோன்று எகிப்தின் அல் அக்பர் தேர்தல் மோசடிகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்துள்ளதுடன் அமெரிக்கா எங்களுக்கு ஜனநாயகம் குறித்து பாடம் எடுப்பதை நிறுத்தவேண்டிய தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளது.
பிரேசிலின் செய்தித்தாள்கள் டிரம்பபை போல ஜனநாயக ஸ்தாபனங்களை அலட்சியம் செய்து வரும் கொரோனாவை விஞ்ஞான ரீதியில் அணுக மறுக்கும் தங்களின் ஜனாதிபதியின் சூழமைவுடன் டிரம்பின் தோல்வியை ஒப்பிட்டுள்ளன.
டிரம்பின் தோல்வி மனிதநாகரீகத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களை தண்டித்துள்ளது.இது பிரேசில் ஜனாதிபதிக்கு ஒரு பாடம் என பிரேசிலின் பொல்கா டி சாவோ பாலோ தெரிவித்துள்ளது.
பிரேசிலின் தலைவர் காலத்தின் உணர்வுகளை பின்பற்றவேண்டும் அல்லது டிரம்ப் போன்று மரணிக்கட்டும் என அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

  Advertisement