தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள்

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசையா சாணக்கியன் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(10) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது.இந்த அரசாங்கத்தில் உள்ள தமிழ் பேசுபவர்கள் இருந்தால் உடன் வெளியேற வேண்டும்.சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.எனது வேண்டுகோள் யாதெனில் உண்மையான தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் இந்த அரசாங்கத்தில்  இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.


Advertisement