தம்பிலுவிலில் பிரதேசத்தில் தாதிய உத்தியோகத்தர் சடலமொன்று மீட்பு

 


வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவிலில் பிரதேசத்தில் தாதிய உத்தியோகத்தரின் சடலமொன்று இன்று மீட்க்கப்பட்டுள்ளது. 

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்த மூன்று பிள்ளைகளின்  தந்தையான தம்பிலுவிலை சேர்ந்த கந்தப்போடி பிரணவநாதன் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது . 

வீட்டிலிருந்து தனது தோட்டத்திற்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் உறவினர்களால் தேடியபோதே அவர்  அங்குள்ள பூவலில் இறந்து மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் அம்பாரை விசேட தடவியல் பொலிசாரும் களத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேநேரம் சுகயீனம் காரணமாக இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement