மேல் மாகாணத்திற்குட்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன


மேல் மாகாணத்திற்குட்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, அங்குலானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குலானை வடக்கு மற்றும் அங்குலானை தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட  கந்தானை மற்றும் மஹாபாகே ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Advertisement