திடீர் நிலநடுக்கம்


 


குரோசியா நாட்டின் மத்திய பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தினால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. தலைநகர் ஜாக்ரேப்புக்கு தென்கிழக்கே உள்ள பகுதியை மையமாக கொண்டு நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளியாக நிலநடுக்கம் நேரிட்டுள்ளது. 


தலைநகர் வரை உணரப்பட்ட இந்நிலநடுக்கத்தால் அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. ஏராளமான வீடுகளின் கூரைகள் பெயர்ந்து விழுந்ததோடு, சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. வீடுகளின் ஜன்னல்கள், வீடுகள் உள்ளே இருந்த பொருட்கள் உடைந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை.