உடுவில் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய களநிலை

 


உடுவில் பிரதேச செயலக பிரிவு  தற்போது முடக்கப்பட்டுள்ளதுடன் காங்கேசன்துறை வீதியில் தாவடி பகுதியில் பொலிஸாரால் பொதுமக்கள் மறித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். 


அத்தியாவசிய தேவை கருதி வருபவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. 


பிரதான வீதியிலேயே மறிக்கப்பட்டபோதும் உள்வீதிகள் ஊடாக பொதுமக்கள் பயணிக்கின்றனர்.

மருனார்மடத்தில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு  உடுவில் பிரதேச செயலக பிரிவை முடக்க யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் மருதனார்மடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு ( உடுவில்) பிரிவுக்குட்பட்ட கிராமசேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. அவையாவன... 

* இணுவில் கிழக்கு 
* இணுவில் தென்மேற்கு 
* இணுவில் மேற்கு 
* இணுவில் வடமேற்கு 
* உடுவில் தென்கிழக்கு 
* உடுவில் தென்மேற்கு 
* உடுவில் மத்தி 
* உடுவில் மத்தி வடக்கு 
* உடுவில் வடக்கு 
* ஏழாலை மேற்கு 
* ஏழாலை கிழக்கு 
* ஏழாலை தென்மேற்கு 
* ஏழாலை தெற்கு 
* ஏழாலை மத்தி 
* ஏழாலை வடக்கு 
* ஈவிணை 
* கந்தரோடை 
* குப்பிளான் தெற்கு 
* குப்பிளான் வடக்கு 
* சங்குவேலி 
* சுன்னாகம் நகரம் கிழக்கு 
* சுன்னாகம் நகரம் தெற்கு 
* சுன்னாகம் நகரம் மத்தி 
* சுன்னாகம் நகரம் மேற்கு 
* சுன்னாகம் நகரம் வடக்கு 
* தாவடி கிழக்கு 
* தாவடி தெற்கு 
* தாவடி வடக்கு 
* புன்னாலைக்கட்டுவன் தெற்கு 
* புன்னாலைக்கட்டுவன் வடக்கு