தேருநர் இடாப்பு மீள் ஆய்வின் போது, அதிகார துஷ்பிரயோகம்



1Sabraas Lr: 

2020ற்கான தேருநர் இடாப்பு மீளாய்வானது தற்சமயம் நாடளாவியரீதியில் நடைபெற்று முடிந்துள்ளது. இம் முறை தேருநர் இடாப்பு மீளாய்வின் போது 30 வருடகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ரிதிதென்னை கிராமத்தில் நிரந்தர வசிப்பிடமாக வசித்து வந்த MC.கயாத்து முகம்மது அவர்கள் மற்றும் மனைவி, பிள்ளைகளினதும் பெயர்களானது தேருநர் இடாப்பில் இருந்து இம் முறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக குறிப்பிட்ட ரிதிதென்னை கிராமத்திற்கான கிராம சேவை உத்தியோகத்தரிடம் இது தொடர்பாக எடுத்து கூறியதுடன், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரிமும் முறையீடு செய்யப்பட்டது இருந்த போதிலும் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து எந்த விதமான சாதகமான பதில்களும் கிடைக்கப் பெறவில்லையென தெரிவிக்கின்றனர்.


மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக முறையீடு செய்த போதிலும் Covid19 காரணமாக இது வரையில் விசாரணைக்கென தரப்பினர்கள் அழைக்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.

 எவ்விவதமான நியாயமான காரணமும் இன்றி தேருநர் இடாப்பில் இருந்து பெயர் நீக்கப்பட்டமையினால்,    மீண்டும் தேருநர் இடாப்பில் பெயரை பதிவு செய்வதற்கு  பாதிக்கப்பட்ட தரப்பு வீணான அலைச்சலுக்கும் மனஉலைச்சலுக்கும் ஆளானதாக தெரிவிக்கின்றனர்.