கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது கொரோனா தோற்றாளர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரெ நேற்று (10)இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனை  இன்று(11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நேற்று(10) இரவு   ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மட்டக்களப்பு பகுதியில்  உயிரிழந்துள்ளார்.