சூரியபுர பகுதியில், விமான விபத்து

 


சீனன்குடாவிலிருந்து விமானி மாத்திரம் பயணித்த, PT6 இலங்கை விமானப்படை பயிற்சி விமானம், கந்தளாய், சூரியபுர பகுதியில் விபத்துக்குள்ளானது.


திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.


திருகோணமலை சீனன்குடா விமானப் படைத்தளத்தில் இருந்து விமானி ஒருவருடன் புறப்பட்டுச் சென்ற PT-06 எனும் சிறிய ரக விமானம் ஒன்று கந்தளாய் பகுதியில் வைத்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்ப்பு துண்டிக்கப்பட்ட  விமானம், கந்தளாய் ஆற்றுப் பகுதியில் விழுந்துள்ளதாகவும், 

விமானி மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.