அடிக்கல் நடும் நிகழ்வு

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  வீடற்ற மக்களின் தேவையினை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதற்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலமாகவும் வருமானம் குறைந்த வீடொன்றினை பெற்றுக்கொள்ள முடியாத குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான வீடொன்றை பெற்றுக்கொடுக்கும் சௌபாக்கியா தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன் பிரகாரம் பிரதேச செயலகம் ரீதியாக 11 இலட்சம் பெறுமதியான தலா ஒரு வீட்டினை அமைத்துக் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 6 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதுடன் மக்கள் பங்களிப்புடன் 11 இலட்சம் பெறுமதியான வீடொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோளவில் 01 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வீடொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக தலைமையக சமுர்த்தி முகாமையாளர் த.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
நிகழ்வில் பிரதேச செயலக சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் சமுர்த்தி முகாமையாளர் கே.அசோக்குமார். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் த.அழகரெட்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


Advertisement