காலியில் இலங்கையில் காலை வாரியது, இங்கிலாந்து


 இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் சுற்றுலா இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

காலியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் வெற்றி பெற 74 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நேற்றையதினம் (17) 3 விக்கெட்டுகளை இழந்து 38 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்றைய இறுதி நாள் ஆட்டத்தை ஆரம்பித்த  அவ்வணி, மிக இலகுவான வெற்றியை ஈட்டியுள்ளது.

1st Test; SLvENG: இங்கிலாந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி-1st Test SLvENG-England Won by 7 Wickets

ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தெரிவானார்.

இத்தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

1ஆவது இன்னிங்ஸ்
இலங்கை 135/1 (46.1)
தினேஷ் சந்திமால் 28 (71)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 27 (54)

டொம் பெஸ் 5/30 (10.1)
ஸ்டுவர்ட் புரோட் 3/20 (9.0)

இங்கிலாந்து 421/10 (117.1)
ஜோ ரூட் 228 (321)
டேன் லோரன்ஸ் 73 (150)

தில்ருவன் பெரேரா 4/109 (36.1)
லசித் இம்புல்தெனிய 3/176 (45.0)

2ஆவது இன்னிங்ஸ்
இலங்கை 359/10 (136.5)
லஹிரு திரிமான்ன 111 (251)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 71 (219)

ஜெக் லீச் 5/122 (41.5)
ஸ்டுவர்ட் புரோட் 3/20 (9.0)
டொம் பெஸ் 3/100 (33.0)

இங்கிலாந்து 76/3 (24.2)
ஜொன்னி பேர்ஸ்டோ 35 (65)*
டேன் லோரன்ஸ் 21 (52)

லசித் எம்புல்தெனிய 2/29 (12.0)Advertisement