ஒலுவிலில், கௌரவிப்பு

 


வி.சுகிர்தகுமார் 0777113659  

  சிறந்த இலங்கையை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின்'; ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டு தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஒலுவில் அல் யாயிசா பாடசாலை கேட்போர் கூடத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நடைபெற்றது.
சிறந்த இலங்கை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன் பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.காசிம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.
2020ஆம் ஆண்டு தரம்-5 புலமை பரிசில் பரீட்சையில், அட்டாளைச்சேனை ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேச பாடசாலைகளில் சித்தியடைந்த 32 மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.
கிராத் ஓதலுடன் ஆரம்பமான பாராட்டு விழாவில் வரவேற்புரையினை உதவிக்கல்விப்பணிப்பாளரும் அமைப்பின் சிரேஸ்ட உபதலைவருமான ஏ.எம்.நௌபடீன் வழங்கினார். தொடர்ந்து தலைமை உரையினை அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளருமான எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் ஆற்றியதுடன் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.
நிகழ்வில் சிரேஸ்ட அறிவிப்பாளர் பிறை எப்எம் பணிப்பாளர் பஸீர் அப்துல் கையூம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதன் பின்னராக புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் விசேட பரிசில்கள் வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.  
நிகழ்வில் கல்வி உயர் அதிகாரிகள் பாடாசலை அதிபர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.Advertisement