வைரஸ் தாக்கம்



 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய விவசாய உற்பத்தி திட்டத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில்  பயிரிடப்பட்ட சோளன் அறுவடை சில இடங்களில்   நடைபெற்ற போதிலும்  சில பகுதிகளில் மிக வேகமாக பரவி வரும்  இனந்தெரியாத வைரஸ் தாக்கத்தால் தற்போது   ஏக்கர்  சோளச்செய்கை    பாதிக்கப்பட்டுள்ளது.

 மேலும்  இந்நோய்த் தாக்கத்தால் முற்று முழுதாகப் பாதிக்கப்பட்டுள்ள சில விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக கல்முனை,  நீலாவணை,  பாண்டிருப்பு  ,நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி ,  நிந்தவூர், ஒலுவில் , பாலமுனை , அட்டாளைச்சேனை  ,அக்கரைப்பற்று , திருக்கோவில்    ,சம்மாந்துறை , காரைதீவு  , மாவடிப்பள்ளி ,போன்ற பிரதேசங்களில் வீட்டுத்தொட்ட பயிர் செய்கையாகவும் இச்சோளச்செய்கை செய்கை செய்யப்பட்டிருந்தது.

இம்முறை செய்கை பண்ணப்பட்டுள்ள சோளன் பயிர்களில் சுமார் 100க்கு மேற்பட்ட ஏக்கர்  நிலப்பரப்பில் படைப்புளு தாக்கத்தின் பரவல் காணப்படுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த விவசாய திணைக்களத்தின் உதவியுடன் நடவடிக்கை பல்வேறு பகுதிகளிலும்  எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இச்செய்கையில்  இனந்தெரியாத வைரஸ்   தாக்கங்கள் அதிகரித்துள்ளதுடன் சோளத்தாவரத்தின்  இலைகளிலும்  பூக்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளன.மேலும் சில பகுதிகளில் சோளச்செய்கையில்  எவ்வாறான நோய் பீடிக்கப்பட்டுள்ளது  என்பதை இன்னும் அடையாளம் காணப்படாமலும் உள்ளது.

 அத்துடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலில் புதிய அரசாங்கத்தின் உள்நாட்டு உணவு உற்பத்தி கொள்கைத் திட்டத்திற்கமைவாக நாடுபூராகவும் ஒரு இலட்சத்தி 80 ஆயிரம் மெற்றிக்தொன் சோளன் உற்பத்தியினைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன்  எம்மை ஊக்குவித்தவர்கள் தற்போது எம்மை கைவிட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.அந்த வகையில்  எமது மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை செய்கை செய்யப்பட்டுள்ள சோளன் பயிர்களில் பெரும்பாலான சோளன் படைப்புழுத் தாக்கத்தின் பரவல் காரணமாக முற்றுமுழுதாக அழிவடைந்த நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
குறிப்பாக   பல பிரதேசங்களின் தற்போது சோளம் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் சோளம் குடலைப்பருவமாக வரும் போதே படைப்புழுக்களின் தாக்கம் ஆரம்பித்து காணப்படுகின்றது. குறித்த பிரதேச மக்களின் ஜீவனோபாய தொழிலில் ஒன்றாக விவசாய செய்கை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதிலும் சோளம் செய்கை மூலம் இவர்கள் தங்களது வாழ்நாள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு உதவியாக உள்ளது. 

அத்தோடு சோளம் குலைகள் சிலவற்றினை படைப்புழுக்கள் அழித்து வெறும் சோளம் நெட்டிகள் மாத்திரம் சில சோளம் செய்கை தோட்டங்களில் காணப்படுகின்றது. இந்த வியடம் தொடர்பாக எந்தவித அதிகாரிகளும் வருகை தரவில்லை என் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் முதல் ஆரம்பித்த படைப்புழுக்களின் தாக்கம் தொடர்ச்சியாக இம்முறையும் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை அனுபவித்த நஷ்டத்தினை இம்முறை பூர்த்தி செய்யலாம் என்ற எண்ணத்தில் மக்கள் சோளம் செய்கையில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ச்சியாக படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டு வரும் பட்சத்தில் பாதிக்கப்படும் எங்களுக்கு உரிய நஷ்ட இட்டினை வழங்குமாறு கோருவதுடன்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது பகுதிகளுக்கு இதுவரையும் வருகை தரவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


இவ்விடயம் தொடர்பாக  விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் , உதவி விவசாய பணிப்பாளர்கள் ,பாடவிதான உத்தியோகத்தர்கள்  ,விவசாய போதனாசிரியர்கள்,  தொழினுட்ப உத்தியோகத்தர்களுக்கு இந்நோய்த்தாக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதம் தொடர்பாகவும்  விவசாயிகளுக்கு விழப்பூட்டல் செய்து  கட்டுப்பாட்டு செயன்முறைகளைக் கற்றுக் கொடுக்கும் பயிற்சிகளும் வழங்கி இருந்தனர்.

இது தொடர்பாக விவசாயிகளுக்கான அறிவூட்டல்கள் வழங்கல் ,  செயன்முறைப் பயிற்சி வழங்கல்   ,களவிஜயங்கல் , துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல்  ,ஒலிபெருக்கி மூலம் அறிவூட்டல், போன்ற நடவடிக்கைகள் எமது உத்தியோகத்தர்களால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.இப்படைப்புளுத்தாக்கமானது இளம்பருவப் பயிர்களுக்கு அதிகமாக காணப்படுவதுடன்  முதிர்பருவ பயிர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.