கிழக்கிலங்கையின் முதுநிலை சட்டத்தரணி தாஹா செய்னுதீன்சேர் காலமானார்




 

Ismai lUvaizurRahman.

அக்கரைப்பற்றைப் பிறந்தகமாகவும்  கல்முனையினை வதிவிடமாகவும் கொண்ட சிரேஸ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் இன்று மாலை கொழும்பில் காலமானார். இவரது ஜனாசா நல்லடக்கம் இன்றிரவு 8 மணிக்கு கொழும்பு -07 ஜாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அக்கரைப்பற்றில் 1940ம் ஆண்டு மார்ச் மாதம் 4ந் திகதி பிறந்தவர்.அக்கரைப்பற்று மெதடிஸ்ட் மிசன் மற்றும் றோமன் கத்தோலிக்கப் பாடசாலைகளில் ஆரம்ப இடைநிலைக் கல்வி பயின்று மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லுாரியில் பயின்றவர்.


1959ம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லுாரியில்,1965ல் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக வெளிவந்தவர். 1974ல் பதில் நீதிபதியானார். 1975 இல் (JPUM) ஆக நியமிக்கப்பட்டார். 


1984/85 காலப் பகுதியில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராகப் பணி புரிந்தார்.சட்டத்தரணிகள் சங்க பிராந்திய வலய உதவித் தலைவராகவும் செயற்பட்டவர்.

இவரது பொற்காலச் சேவையை கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் 2015ல் பாராட்டிக் கௌரவித்தது.


சுமார் 56 வருட காலம் கிழக்கின் சகல நீதிமன்றுகளிலும், குடியியல் வழக்குகளில் ஜொலித்தார். 

 

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், தமது புதல்வர்களை சட்டத்துறையில் நாட்டம் கொள்ளச் செய்யவில்லை. இவரது சகோதர்களில் ஒருவர் அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய முன்னாள் அதிபர் ஹாருன் அவர்கள். மற்றயவர் மர்ஹீம் இக்பால் அசிரியர், அடுத்தவர் சகோதரி மர்ஹீம் றக்கீபா ஆசிரியை ஆகியோருமாகும்


தனது 54 வருட கால சட்டத் தொழிலில் சிரேஸ்ட கனிஸ்ட சட்டத்தரணிகள் பலருக்கு சட்டத் தொழிலைக் கனவான் தொழிலாக வாழ்ந்து மறைந்தவர் மர்ஹீம் தாஹா செய்னுதீன்.


இவரது பிரிவால் வாடும் இவரது குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.