பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,இலங்கையில்

 


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.


பாகிஸ்தான் பிரதமருக்கு விமான நிலையத்தில் இராணுவ மரியாதைகளுடன் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.


இந்த வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.


முன்னதாக, பாகிஸ்தான் பிரதமரை ஏற்றிவரும் விமானத்திற்கு இந்திய வான் பரப்பில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான் பிரதமர் நாளை (24) ஜனாதிபதியை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.