மீன்குஞ்சுகளை இடும் நிகழ்வு

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள நீர்த்தடாகத்தில் மீன்குஞ்சுகளை இடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பு திட்டத்தில் இணைத்துக்கொள்ளபட்ட கோளாவில் தீவுக்காலை பிரதேசத்தில் வசிக்கும் கதிர்காமன் ஜெகநாதனினால் பராமரிக்கப்பட்டுவரும் நன்னீர் மீன்வளர்ப்பு நீர்த்தடாகத்தில் இருந்து பெறப்பட்ட மீன்குஞ்சுகளையே இவ்வாறு விடப்பட்டது.

பிரதேச செயலக வளாகத்தில் கடந்த காலத்தில் குப்பை கூழங்களுடன் காணப்பட்ட நீர்த்தடாகம் புனரமைக்கப்பட்டு தற்போது மீன்வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.