வீறு கொண்ட வேங்கையானது, கவனயீர்ப்பு

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 2 வது நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (04) தாழங்குடா - மட்டக்களப்பு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கோட்டும் இந்த போராட்டம் போராட்டம் தொடர்கிறது.

மேலும் சுதந்திரம் கிடைத்து 73 ஆண்டுகளாகியும் தமிழ் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை வட கிழக்கு தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி வேண்டும் என இரண்டாம் நாளாக தொடரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணியில் கோசங்களை எழுப்பியவாறு பேரணி தொடர்கிறது .

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இணைந்து கொண்ட சில  முஸ்லிம் மக்களும் ஆதரவினை வழங்கி வருவதை காணமுடிகின்றது.t


Advertisement