#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு





இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று முற்பகல் ஆரம்பமானது.

இம்முறை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான குவேர டி சொய்சா மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸிற்கு 5162 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சாவிற்கு 2807 வாக்குகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2355 மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.