உடல்களை அடக்கம் செய்ய மேலும் 6 இடங்கள் பரிந்துரை

 


COVID தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூடிய மேலும் 6 இடங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


முதலில் இரணைத்தீவில் இதனை ஆரம்பித்தாலும், புத்தளம், ஓட்டமாவடி மற்றும் மன்னார் உள்ளிட்ட 6 பகுதிகள் அதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.


இரணைத்தீவில் அடக்கம் செய்வது தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய இடங்களில் அதற்கு சந்தர்ப்பம் அளிப்பது தொடர்பில் தற்போது ஆய்வுகள் இடம்பெறுகின்றன.


முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் நீர் நிலைகளில் பிரச்சினைகள் ஏற்படாத பகுதிகளை தெரிவு செய்யுமாறு முஸ்லிம் சமூகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.