சந்தேக நபர் தற்கொலை

 


Update : சடலமாக மீட்கப்பட்ட பெண்; சந்தேகநபர் தற்கொலை .

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குருவிட்டை – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சடலத்தின் தலைப்பகுதி இல்லாதமையால், மரபணு (DNA) பரிசோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  கூறினார்.

இந்த கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான, விடுமுறையிலிருந்த புத்தல (Buttala) பொலிஸ் நிலையத்தின் உப​ பொலிஸ் இன்ஸ்பெக்டரே அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித ரோஹன இதன்போது கூறினார்.

ஹங்வெல்ல பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தங்குமிடமொன்றிற்கு ஆணொருவரும் பெண்ணொருவரும் கடந்த 28 ஆம் திகதி இரவு வருகை தந்ததாகவும் கடந்த முதலாம் திகதி குறித்த ஆண் மாத்திரம் தங்குமிடத்தில் இருந்து பயணப் பை ஒன்றுடன் வௌியேறியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்