ரசிகர்களை வசீகரித்த, நடிகர் விவேக் மறைவு


 


நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59.


நேற்று வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.


இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.


நேற்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயகுமார் சொக்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "காலை 11 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரது குடும்பத்தினரால் கொண்டு வரப்பட்டார். அவரது உடல்நிலையை நிபுணர்கள் குழு பரிசோதித்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ சிகிச்சையில் உள்ள விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது," என்று கூறப்பட்டிருந்தது.



விவேக் (19 நவம்பர் 1961 - 17 ஏப்ரல் 2021)[ தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக கோவில்பட்டியில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.

இந்திய அரசு வழங்கும் 2009ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.[7]

நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு காலை 4:35 மணிக்கு காலமானார்