மனித நேயம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கொரோனா அனர்த்தத்தினால் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அறுவடை செய்த வெள்ளரிப்பழத்தை கொள்வனவு செய்து  வியாபாரம் செய்யும் ஒருவரின்   மோட்டார் சைக்கிள் வீதியில் இடைநடுவில்  பழுதடைந்துள்ளது.

இவ்வாறு வீதியில் சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பழுதாகிய தனது மோட்டார் சைக்கிளுடன்     தடுமாறியவரை நெருங்கிய  மட்டக்களப்பு மாவட்டம்   களுவாஞ்சிக்குடி பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த  விஷேட அதிரடிப் படையினர் (STF) மனித நேயத்துடன் உதவி செய்த செயற்பாடு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

 இம்மனித நேய  செயற்பாட்டினை திங்கட்கிழமை(14) விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளதுடன் குறித்த இடத்தில்   நின்று   மோட்டார் சைக்கிளை பழுதுபார்த்து சரி செய்து கொடுத்துள்ளனர்.

குறித்த உதவியை வீதியில் பயணம் செய்த எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் பழுதுகளை சரி செய்து கொடுத்த விசேட அதிரடிப்படையினருக்கு குறித்த வியாபாரி நன்றிகளை தெரிவித்துள்ளார்.

மேலும்  விசேட அதிரடிப்படை   படையணியின் மோட்டார் சைக்கிள் படையணியின்  தலைமையதிகாரியாக பொலிஸ் பரிசோதகர்   தென்னகோன்  செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.