வீதிகள் சமிஞ்சைகள் புனரமைப்பு செய்யும் செயற்பாடு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை   காரைதீவு சம்மாந்துறை  உள்ள   வீதிகள் சமிஞ்சைகள் புனரமைப்பு செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள்  வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முகமாகவும் பாதசாரிகளின் நலன் கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியினூடாக பயணம் செய்பவர்களை மிக அவதானத்துடன் செல்லுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை எச்சரிக்கை பாதாதை மூலமாக அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் கொரோனா 3 அனர்த்தம் கல்முனை பிராந்தியத்தில் அச்சுறுத்தலை மேற்கொண்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்  இவ்வாறான செயற்பாட்டினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனமும் தொழிநுட்ப ரீதியாகவும் இச்செயற்பாட்டிற்கு உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.