இந்தியாவின் வெள்ளிி மங்கை மீராபாய் சானு


 


டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடக்கிவைத்தார்.


49 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் கிளீன் அன் ஜெர்க் பிரிவில் அவர் முதல் முயற்சியில் 110 கிலோ தூக்க முயன்று அதை சரியாகச் செய்தார்.


இரண்டாவது முயற்சியில் 115 கிலோ தூக்க முயன்றார். அதில் வெற்றி பெற்றதோடு அதன் மூலம் ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார்.


மூன்றாவது முயற்சியில் அவர் 117 கிலோ தூக்க முயன்றார். ஆனால், அதில் அவர் வெற்றி பெறவில்லை.


ஸ்னாட்ச் பிரிவில், மீராபாய் 84 மற்றும் 87 கிலோ எடையை தூக்கினார். ஆனால் மூன்றாவது முறையாக 89 கிலோவை தூக்க முடியவில்லை.


மொத்தம் அவர் தூக்கிய எடை 202 கிலோ.


டோக்யோ ஒலிம்பிக் 2020 பதக்கப் பட்டியல்

இது அவருக்கு ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுத் தந்தது. இந்தியாவுக்கும் ஒலிம்பிக்கில் நல்ல தொடக்கத்தைத் தந்தது.


பதக்கப்பட்டியலில் இந்தியா


ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு பதக்கம் வெல்வதே குதிரைக் கொம்பாக இருந்த காலம் உண்டு. போட்டி இறுதியை எட்டும் வரை பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயரைப் பார்ப்பதே அரிதாக இருந்த காலமும் உண்டு. ஆனால், இந்த ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வழங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே இந்தியா தன் முதல் பதக்கத்தை உறுதி செய்துகொண்டதுடன், தங்கப் பதக்கங்கள் வென்ற சீனா, இரான் முதல் இரண்டு இடத்தில் இருக்க, அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது.


விரல்விட்டு எண்ணக் கூடிய பதக்கங்களே அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியல் இப்படியே தொடராது என்றபோது இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு முதல் நாளிலேயே இந்தியாவின் பெயரை பதக்கப்பட்டியலில் பார்ப்பதும், அதுவும் மூன்றாம் இடத்தில் பார்ப்பதும் மகிழ்ச்சியை தந்திருக்கும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.