பணத்துடன் வெளியேறினேனா..? வீடியோவில் பதிலளிக்கிறார் அஷ்ரப் கனி


 



தலிபான்களுக்கு பயந்து பணத்துடன் நான் தஜிகிஸ்தானுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுவை அனைத்தும் பொய் என ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி விளக்கமளி்த்துள்ளார். 

ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களை தங்கள் பிடியில் கொண்டு வந்த தாலிபான்கள் கடந்த கடந்த 15ஆம் திகதி தலைநகர் காபுலில் நுழைந்தனர். அந்நகர எல்லையில் தங்களின் வீரர்களை குவித்து வைத்திருந்த தாலிபான்கள் வன்முறையின்றி அதிகார பறிமாற்றத்திற்காக காத்திருந்தனர். 

இதையடுத்து உயிருக்கு பயந்த அதிபர் அஷ்ரப் கனி, அன்றைய தினம் விமானப் படை விமானத்தில் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. 

இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து அஷ்ரப் கானி விமானத்தில் புறப்பட்ட போது 4 கார்களும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிக் கொண்டு சென்றதாகவும் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். 

இந்நிலையில் அஷ்ரப் கானி தனது பேஸ்புக் பக்கத்தில் 'மக்கள் இரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார். தான் வெளியேறாவிட்டால், மிகப்பெரிய மனிதப்பேரழிவு நிகழும் 60 இலட்சம் மக்கள் வாழும் நகரம் இரத்தக்களறியாகும் என தெரிவித்த அவர், ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே அஷ்ரப் கனி உள்ளிட்டோர் நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்ததாகவும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி ஹெலிகாப்டரில் தப்பித்து தஜிகிஸ்தான் செல்லவி்ல்லை ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு, அவர் நேயஅடிப்படையில் அஷ்ரப் கனி தங்கவைக்கப்பட்டுள்ளார் எனத் ஐக்கிய அரபு அமீரகம் தெரவித்துள்ளது.

- Kayal