கொட்டகலை பிரதேசத்தில் உள்ள அனைத்து கடைகளையும் இன்று (19) முதல் மூடல் (க.கிஷாந்தன்)

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் முகமாக கொட்டகலை பிரதேசத்தில் உள்ள அனைத்து கடைகளையும் இன்று (19) முதல் மூட கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை வர்த்தகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு கொட்டகலையில் உள்ள அனைத்து கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகள் மற்றும் நகரத்தில் பல கொரோனா இறப்புகளைத் தொடர்ந்து கொட்டகலை பிரதேச சபை மற்றும் வர்த்தகர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்தன.

கொட்டகலை நகரத்தின் அனைத்து இடங்களையும் கிருமி நீக்கம் செய்து சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.