பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன


 


(க.கிஷாந்தன்)

 

பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரகாலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

 

பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவீட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பதுளை நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

 

எனினும், ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

 

இதேவேளை பண்டாரவளை நகர வர்த்தக நிலையங்கள் கொவிட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த 16 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக நகர  வர்த்தக சங்கத்தினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.