இன்று நாம் வளர்க்கும் தென்னை நாளை நம்மைக் காக்கும் பிள்ளை'


 


வி.சுகிர்தகுமார் 0777113659    


  நாமே நமக்கு' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 'இன்று நாம் வளர்க்கும் தென்னை நாளை நம்மைக் காக்கும் பிள்ளை'  எனும் கருத்திட்டத்தினூடாக நாமே நமக்கு எனும் அமைப்பு தென்னம் கன்றுகள் வழங்கும் பணியை ஆரம்பித்துள்ளது.

வடகிழக்கு மக்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தல் ஊடாக தன்னிறைவான சமூதாயத்தை உருவாக்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பிலுவில் - 01கிழக்கு, சங்கமன்கிராமம், தங்கவேலாயுதபுரம் போன்ற பகுதியில் வாழும் வீட்டுத்தோட்ட விவசாய பயனாளிகளுக்கு 200 தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

;; அபிவிருத்தி உத்தியோகத்தர் தினேஸின் வேணடுகோளுக்கிணங்க  திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் அனுமதியுடன் உதவிப் பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரன் பங்குபற்றுதலுடன் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இத்திட்ட இணைப்பாளர் கண்ணன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரகள்;, கிராம உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.