பனங்காடு வைத்தியசாலையில் இடம்பெற்ற துரதிஸ்ட சம்பவத்திற்கு, மன்னிப்பு கோரினார் பங்குத்தந்தை


 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்ற துரதிஸ்ட சம்பவத்திற்கு கிராமத்தின் சார்பில் மன்னிப்பு கோரினார் அலிகம்பை கிராம தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு சூசைநாயகம் அடிகளார்.
மேலும் வைத்தியசாலையின் சேவைகளை தங்கு தடையின்றி முன்னெடுக்குமாறும் வைத்தியரையும் ஊழியர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
சம்பவம் தொடர்பில் வைத்தியரை தாக்கியவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் குறித்த பிரதேச மக்களையும் அவர்களுக்கு பொறுப்பாகவுள்ள மதகுருவையும் அழைத்து வந்து மதகுரு மூலமாக வைத்தியரிடம் மன்னிப்பு கேட்க வைப்பதற்கான நடவடிக்கையினை பனங்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆர்.சுவர்ணராஜ் தலைமையிலான குழுவினர்; மேற்கொண்ட நிலையிலேயே இன்று வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட பங்குத்தந்தை மக்கள் சார்பாக மன்னிப்பு கோரியதுடன் தனது கவலையினையும் வெளியிட்டார்.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் யு.எல்.எம்.சகீல் கடந்த 17ஆம் திகதி அலிகம்பை கிராமத்தை சேர்ந்த பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பின்மை காரணமாக அவர் பணியிலிருந்து விலகிக் கொண்டார். இதனால் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களும் பணியிலிருந்த விலகிக்கொண்டமையினை அடுத்து வைத்திய சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் தலைமையிலான அரச வைத்திய அதிகாரிகள் கல்முனை பிராந்திய கிளை சங்கத்தின் தலைவர் எம்.சி.எம்.மாஹிர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் எம்.வை.எம்.மாஹிர் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வைத்தியர் யு.எல்.எம்.சஹீல் வைத்தியர் ஜாரியா கல்முனை உதவி பொலிஸ் அத்தி;யட்சகர் பி.எம்.ஜயலத் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கிராம மக்கள் இணைந்து நேற்று (21) வைத்தியசாலையில் மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாக இத்தீர்மானமும் எட்டப்பட்டது.
அங்கு எட்டப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இன்று குறித்த கிராமத்தை சேர்ந்த சிலரும் அக்கிராமத்தின் பங்குத்தந்தையும் வைத்தியசாலைக்கு வருகை தந்து கலந்துரையாடலில் பங்கேற்று நிலைமையினை சீர் செய்தார்.