பாகிஸதானிக் உதவிக் கரம் இலங்கைக்கு


 


இலங்கையில் கொரோனா சவாலை வெற்றிகொள்வதற்காக பாகிஸ்தானினால் மருத்துவ உபகரணங்கள் சில வழங்கப்பட்டுள்ளன.


இதற்கான நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது.


இந்த மருத்துவ உபகரணங்கள், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டன.


பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 75 செயற்கை சுவாச கருவிகள், 150 C-PAP செயற்கை சுவாச கருவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.


பாகிஸ்தானின் சார்க் கொவிட் – 19 அவசர உதவித்திட்டத்தின் கீழ் இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.